அடேங்கப்பா.. விஜய்க்கு ஜோடியாக நடிக்க இந்த நடிகைக்கு சம்பளம் இவ்வளவா!! யாருப்பா அது??
நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனையும் படைத்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. பூஜா ஹெக்டே மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த
முகமூடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். தெலுங்கு ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். மேலும் அவரது கைவசம் தற்போது பிரபாஸுடன் ராதே ஷ்யாம் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா போன்ற படங்கள் உள்ளன.
இந்த நிலையில் தளபதி 65 திரைப்படத்தில் நடிக்க நடிகை பூஜா ஹெக்டே 3.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவர் திரைப்படத்தில் நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது