அடக்கடவுளே.. இப்படி ஆகிருச்சே! யாஷிகா பங்கேற்ற பேஷன் ஷோவில் பணியில் இருந்த காவலர்களுக்கு ஏற்பட்ட சோதனை.! ஏன்? என்ன நடந்தது??

அடக்கடவுளே.. இப்படி ஆகிருச்சே! யாஷிகா பங்கேற்ற பேஷன் ஷோவில் பணியில் இருந்த காவலர்களுக்கு ஏற்பட்ட சோதனை.! ஏன்? என்ன நடந்தது??


police-officers-transfer-for-giving-ramb-walkin-fashion

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் நடிகையாக என்ட்ரி கொடுத்தவர் யாஷிகா ஆனந்த். அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்த அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் சில படங்களில் கமிட்டானார். 

இதற்கிடையில் இன்ஸ்டாகிராமில் பிசியாக இருக்கும் யாஷிகா அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இந்நிலையில் அண்மையில் சென்னை மயிலாடுதுறையில் தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஃபேஷன் ஷோவில் யாஷிகா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அங்கு ராம்ப் வாக் செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

yashika

அதனைத் தொடர்ந்து பலரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராம்ப் வாக் செய்தனர். அப்பொழுது நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு அளிக்க வந்திருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரும், நான்கு காவலர்களும் ராம்ப் வாக் செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் போலீஸ் சீருடையில் இந்த மாதிரி ராம்ப் வாக் செய்யலாமா? என சர்ச்சை கிளம்பியது. 

அதனை தொடர்ந்து மூன்று பெண் காவலர்கள், நான்கு ஆண் காவலர்கள் வெவ்வேறு பிரிவுகளில் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.