தமிழகம் சினிமா

அடுத்த பிரச்சனை ஆரம்பம்..! கொரோனா சமயத்தில் இது தேவையா..? நடிகை வனிதா மீது வழக்கு பதிவு..!

Summary:

Police complaint against to actress vanitha

கொரோனா சமயத்தில் அனுமதி இன்றி போட்டோ சூட் நடத்தியதாக நடிகை வனிதா மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக வலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்படும் நபர்களில் ஒருவராக மாறிவிட்டார் நடிகை வனிதா. அதற்கு முக்கிய காரணம் அவரது மூன்றாவது திருமணம். பீட்டர் பால் என்பவரை வனிதா மூன்றாவது திருமணம் செய்துகொண்டநிலையில் பலரும் அது குறித்து பல்வேறு கருத்துக்களை கூறிவந்தனர்.

தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை வனிதா. சென்னை ஐயப்பந்தங்களில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்துவரும் நடிகை வனிதா கொரோனா ஊரடங்கு காலத்தில் அனுமதி இன்றி 20 நபர்களுடன் சேர்ந்து குடியிருப்பு  பகுதியில் நிகழ்ச்சி நடத்தியதாக, குடியிருப்போர் சங்க பொதுச்செயலாளர் நிஷா என்பவர் போரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சி தொடர்பாக தங்களிடம் அவர் எந்த  அனுமதியும்  பெறவில்லை எனவும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் கொரோனா சமயத்தில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து போலீசார் நடிகை வனிதாவின் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Advertisement