வைரல் வீடியோ: ஐய்யோ..! எப்படியாச்சும் அந்த மீனோட உயிர காப்பாத்தணும்..! ஒரு மீனுக்காக போராடிய பன்றிக்குட்டிகள்.!



pig-saves-fish-viral-video

தண்ணீரில் இருந்து வெளியே வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மீன் ஒன்றை பன்றிக்குட்டிகள் ஒன்று சேர்ந்து தண்ணீருக்குள் தள்ள முயற்சிக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒருவரான சுசாந்தா நந்தா அவர்கள் அவ்வப்போது மிகவும் சுவாரசியமான வீடியோ காட்சிகளை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ காட்சி ஒன்று பார்வையாளர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

சுமார் 11 வினாடிகள் ஓடும் அந்த வீடியோ காட்சியில் மீன் ஒன்று தண்ணீரில் இருந்து வெளியே வந்து சுவாசிக்க முடியாமல் நிலத்தில் கிடக்கிறது. இதனை பார்த்த சில பன்றி குட்டிகள் அந்த மீனை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்ற எண்ணத்தில் தன் முகத்தால் அந்த மீனை உருட்டி உருட்டி தண்ணீற்குள் கொண்டு சென்று சேர்க்கிறது.

ஒரு சிறிய கருணைக்காக செய்யப்படும் உதவி மிக பெரிய செயலாக உருவெடுக்கிறது எனவு சுசாந்தா நந்தா அவர்கள் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். மற்ற உயிர்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் மனிதர்களையும் தாண்டி ஒரு விலங்கிடமும் இருக்கும்  காட்சி பார்ப்போரை நெகிழ்ச்சி அடையவைத்துள்ளது. இதோ அந்த வீடியோ காட்சி.