சினிமா

முதல் முறையாக வெளியான பிச்சைக்காரன் பட நடிகை சாட்னா டைட்டஸ் மகன் புகைப்படம்.!

Summary:

Pichaikaran movie actress sadna titus son photos

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைகாரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலாமானவர் நடிகை சாட்னா டைட்டஸ். பிச்சைக்காரன் படம் மாபெரும் வெற்றிபெற்றதால் சாட்னா டைட்டஸ் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பிச்சைக்காரன் படத்தில் நடிப்பதற்கு முன்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு குரு சுக்ரன் என்ற தமிழ் படத்தில் அறிமுகமாகியுள்ளார்  சாட்னா டைட்டஸ். இவரது முதல் படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிபெறவில்லை. பிச்சைக்காரன் படத்தை தொடர்ந்து எய்தவன், திடம் போட்டு திருடுற கூட்டம் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்  சாட்னா டைட்டஸ்.

https://cdn.tamilspark.com/media/17180ntk-maxresdefault.jpg

அந்த படங்களும் சரியாக கை கொடுக்காததால் பிச்சைக்காரன் படத்தின் விநியோகஸ்தர் கார்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார்  சாட்னா டைட்டஸ். திருமணம் முடிந்த இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

இதுவரை அந்த குழந்தையின் புகைப்படம் வெளிவராத நிலையில் தற்போது பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.


Advertisement