போர்க்களமாக மாறும் பிக்பாஸ் வீடு! உள்ளே என்ன நடந்தது தெரியுமா?

தற்போது சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை நடிகர் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் துகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியை போன ஆண்டும் நடிகர் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கினார்.
இந்த பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் இறுதியில் நடந்த டாஸ்கில் ஜனனி வெற்றி பெற்று நேரடியாக இறுதி சுற்றுக்கு தேர்வாகி விட்டார். அதனை அடுத்து தற்போது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டிகள் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 16 பேர் கலந்து கொண்டனர் தற்போது இருதியாக வெறும் 6 பேர் உள்ளனர். அதில் ஐஸ்வர்யா, பாலாஜி, ஜனனி மற்றும் ரித்விகா, யாஷிகா, விஜய லட்சுமி என 6 பேர் இருக்கிறார்கள்.
மேலும் நடிகர் கமல்ஹாசன் இந்த வாரம் இறுதியில் எலிமினேஷனில் இரண்டு பேர் வெளியேற்ற படுவார்கள் என கூறிவிட்டார். இந்த சூழ்நிலையில் டாஸ்க்குகள் கடுமையாகியுள்ளது. மேலும் ஐஸ்வர்யா மீது அடுத்தடுத்து அடுக்கடுக்காக குற்றசாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது.
ஆனால் ஐஸ்வர்யா ஸ்மோக்கிங் ரூமில் நின்று கொண்டு கையில் ஏதோ ஆகிவிட்டது போல இது வலி, உடல் ரீதியான டார்ச்சர் என கதறி அழுகிறார்.