சினிமா

சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் நடிகர் சிம்புவின் புகைப்படம்! ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி..!

Summary:

Photographing Simbu's photo on diamonds in social networks! Fans shock great ..!

தமிழ் சினிமா உலகிற்கு முதன் முதலாக குழந்தை நட்சத்திரமாக நுழைந்தார்.
இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்தபோதே அனைவரையும் கவர்ந்தவர்.
குழந்தை நட்சத்திரமாக நடித்து பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். 

மேலும் அவர் குழந்தை நட்சத்திரமாக நடித்தபோதில் இருந்து தற்போது வரை தனக்கென ஒரு தனி அடையாளத்தையும் ரசிகர்கள் பட்டாளத்தையும்  கொண்டவர்தான் நடிகர் சிம்பு. இவர் அவரது கலைப்பயணத்தில் சிறந்த முறையில் சென்றுகொண்டு இருந்தார்.

நடிப்பில் மட்டும் அல்ல இவர் இசை அமைப்பாளராகவும், பாடல்கள் எழுதுவது மற்றும் எழுதிய பாடல்களை பாடுவது, படங்களை இயக்குவது என அனைத்து துறைகளிலும் தலை சிறந்தவராக விளங்கி வந்தார். இவ்வாறு நல்ல முறையில் உயர்ந்து கொண்டிருந்தார் யாருடைய கண் பட்டதோ தெரியவில்லை, சில காலமாக அவர் இடைவெளி விட்டு விட்டார்.

அதற்கு பின்பு தற்போது செக்க சிவந்த வானம் மற்றும் மாநாடு என்னும் இரண்டு படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். அவரது நடிப்பில் உருவான படங்கள் அனைத்தும் தற்போது அடுத்து அடுத்து வரிசையாக வெளிவர உள்ளன.

இவர் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் சமூக வலைத்தளங்களில் நடிகர் சிம்புவின் முகம் முழுவதும் இரத்தம் வழிவது போன்ற ஒரு கொடூரமான புகைப்படம் மிகவும் பரவலாக பரவி வருகிறது.

இந்த புகைபடத்தை பார்த்தவர்களுக்கு முதலில் இது என்ன என்றே புரியவில்லை. பின்பு தான் அவர்களுக்கு தெரிய வந்தது அது செக்க சிவந்த வானம் படத்தின் போஸ்டர் என்று. மேலும் அந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் தற்போது மிக பெரிய ட்ரெண்டாகி வருகிறது.


Advertisement