சினிமா

'பேட்ட' படத்தில் இதுவரை தோன்றிராத தோற்றத்தில் சூப்பர் ஸ்டார். புதிய தகவல்

Summary:

petta-rajinjkanth new ketup

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்  165 வது  படமான 'பேட்ட'  தற்பொழுது உத்திரப்பிரதேசத்தில் உள்ள லக்னோவில் படப்பிடிப்பு  விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி,  பாபி சிம்ஹா,  சிம்ரன்,  த்ரிஷா,  மேகா ஆகாஷ், குருசோமசுந்தரம் போன்ற பல முன்னணி திரை நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

படத்தின் கதைக்களமாக ஊட்டியை மையமாக வைத்து தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.   இப்படத்தில் ரஜினிகாந்த் ஒரு ராணுவ வீரராக இருந்து தற்போது ஹாஸ்டல்  வார்டன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  அவர் ராணுவ வீரராக நடிக்கும் காட்சிகள் லக்னோவில் நடைபெற்ற நடைபெற்று வருகிறது.


Advertisement