ப்பா..செம தில்லுதான்! அந்தரத்தில் பறந்த ஈரமான ரோஜாவே பவித்ரா! இந்த வீடியோவை பார்த்தீங்களா!!

ப்பா..செம தில்லுதான்! அந்தரத்தில் பறந்த ஈரமான ரோஜாவே பவித்ரா! இந்த வீடியோவை பார்த்தீங்களா!!



pavithra-paragliding-video-viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர்கள் ஏராளம். அவ்வாறு மக்களை கவர்ந்த தொடர்களுள் ஒன்றுதான் ஈரமான ரோஜாவே. இந்தத் தொடரில் மலர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் பவித்ரா.

இத்தொடரில் இவரது நடிப்பு பலராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது. மேலும் இத்தொடரின் மூலம் பவித்ராவிற்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமும் உருவானது. இந்த நிலையில் அவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் வந்து என்னை தொடும் என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த சீரியல் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றபோது அந்தரத்தில் பறந்து
பாராகிளைடிங் சென்ற வீடியோவை பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.