சினிமா

என்னது! குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகுகிறாரா இந்த இளம் பிரபலம்! அவரே அளித்த விளக்கம்!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  இந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளி இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது
சமையல் திறமையை ஊக்குவித்தும், அதையே ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையிலும் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் வனிதா விஜயகுமார் வெற்றியாளரானார்.

மேலும் இரண்டாவது சீசனில் தற்போது அஸ்வின், பாபா பாஸ்கர், கனி, ஷகீலா, பவித்ரா லட்சுமி ஆகியோர் போட்டியாளர்களாகவும், அவர்களிடம் ரகளை செய்து வரும் கோமாளிகளாக மணிமேகலை, ஷிவாங்கி, புகழ், பாலா ஆகியோர்களும் உள்ளன. இந்நிலையில் கடந்த இரு வாரங்களாக பவித்ரா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. அதனால் அவர் நிகழ்ச்சியை விட்டு விலகிவிட்டாரா என ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழ துவங்கியது.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் பவித்ரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், சில தனிப்பட்ட காரணங்களால் என்னால் கடந்த இரு வாரங்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை.  ஆனால் அடுத்த வாரம் நிச்சயம் வந்துவிடுவேன். உங்களை ஏமாற்றியதற்காக மிகவும் வருந்துகிறேன். என் மேல் நீங்கள் காட்டும் அன்பிற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி என பகிர்ந்துள்ளார். 


Advertisement