சினிமா

வீழ்வேனென்று நினைத்தாயோ! மீண்டு வருவேன்.. பார்த்திபன் குரலில் நான் சென்னை! வைரலாகும் வீடியோ!

Summary:

Partiban video about chennai

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் இவற்றில் சென்னையிலேயே கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது.  

 இந்நிலையில் வந்தாரை வாழவைக்கும் சென்னை என நம்பி அங்கு வாழ்ந்து வந்த பல பகுதி  மக்களும்,  தற்போது சென்னையில் இருந்தால் உயிருக்கு ஆபத்து என எண்ணி ஊரை மொத்தமாக காலி செய்யும் நிலையும் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் சென்னை இதுபோன்று பல பாதிப்புகளை சந்தித்து உள்ளது. மேலும் அவற்றில் இருந்து வெற்றிகரமாக மீண்டும் வந்துள்ளது. அதனைப் போலவே கொரோனாவிலும் மீண்டு வரும், வீழ்வேனென்று நினைத்தாயோ!  என சென்னையின் குரலாக கவிதை ஒன்றை பார்த்திபன் ஆடியோவாக வெளியிட்டுள்ளார்.

இதனை அமைச்சர் வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு,  அதில் பேரிடர்கள் வென்ற சாதனை மைல்கற்களே என் வரலாறு. ஆயிரமாயிரம் களப்பணியாளர்கள் அரசின் முயற்சிகளோடு இணைந்து, முகக்கவசம் அணிந்து, சமூக விலகல் கடைபிடித்து, தற்காத்து இம்முறையும் இடர் வெல்வேன். மீண்டும், மீண்டு வருவேன்!  என பதிவிட்டுள்ளார்.


Advertisement