இயக்குனர் சேரன் இப்படிப்பட்டவரா? நடிகர் பார்த்திபனும் காயப்பட்டுள்ளாரா? அவரே கூறிய அதிர்ச்சி தகவல்!!

இயக்குனர் சேரன் இப்படிப்பட்டவரா? நடிகர் பார்த்திபனும் காயப்பட்டுள்ளாரா? அவரே கூறிய அதிர்ச்சி தகவல்!!


parthiban-talk-about-cheran

பிக்பாஸ் சீசன் மூன்று 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும்  இன்னும்இறுதி கட்டத்திற்கு  இரண்டு, மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிய ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களாக கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்சன், சேரன் ஆகியோர் மட்டுமே உள்ளனர். மேலும் ஒவ்வொருவரும் நிகழ்ச்சியில் வெற்றி பெறுவதற்காக தீவிரமாக உழைத்து வருகின்றனர்.

Cheran

இந்நிலையில் ஒத்த செருப்பு படம் குறிப்பு பேட்டி அளித்த பார்த்திபனிடம் பிக்பாஸ் குறித்தும் ,  இயக்குனர் சேரன் குறித்தும் கேட்டபோது, அவர் நான் ஒத்த செருப்பு படத்தில் பிஸியாக இருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பது இல்லை. அதனால் அதுகுறித்து என்னால் கூற முடியவில்லை. ஆனால் சேரன் மிகவும் சிம்பிளான இயக்குனர். அவர் மற்றவர்கள் காய படுவதைப் பற்றி சிறிதளவு கூட கவலைப்பட மாட்டார்.

மேலும் ஒரு நாள் மேடையில் குப்பையான படம் ஒன்றை பார்த்துவிட்டு, என்னங்க பார்த்திபன் படம் மாதிரி எடுக்குறீங்க என மேடையிலேயே கூறினார். மத்தவங்க காயபடுவார்கள் என்பதை பற்றி அவர் கவலைப்பட மாட்டார்.

Cheran

மேலும் அவருடைய பாரதி கண்ணம்மா படம் ஜாதி ஒழிப்பு பற்றி சமூகத்தில் பெருமளவில் பேசப்பட்ட ஒரு படம் ஆகும். அப்போது அவர் ரொம்ப சீரியஸாக இருந்ததால் படத்தில் நானும் வடிவேலுவும் எங்களது சில காமெடிகளை பயன்படுத்தினோம்.

ஆனால் சேரன் அதற்கு சம்மதிக்கவில்லை. மேலும் எங்களது காமெடி ஒர்க் அவுட் ஆகிவிட்டால் அவருக்கு நல்ல பெயர் கிடைக்காது என எண்ணி அக்காட்சிகளை படத்திலிருந்து நீக்கினார். பின்னர் பேசி அவரை சம்மதிக்க வைத்தோம் என கூறியுள்ளார்