சினிமா

இந்த ஒத்த வீடியோவால் செம ஹேப்பியான நடிகர் பார்த்திபன்!! இதுதான் காரணமா?

Summary:

parthiban surprised by amirkhan video

தமிழ் சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகராக பிரபலமடைந்தவர் பார்த்திபன். இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் புதியபாதை, சுகமான சுமைகள், குடைக்குள் மழை பச்சக்குதிரை, கோடிட்ட இடங்களை நிரப்புக போன்ற பல படங்களை இயக்கியும் உள்ளார்.

மேலும் எப்பொழுதும் வினோதமான புதிய முறையில் யோசிக்கும் பார்த்திபன், கிண்டல் கலந்த கலகலப்பான பேச்சால் ஏராளமான ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் தற்போது ஒத்த செருப்பு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ஒத்த செருப்பு க்கான பட முடிவு

 மேலும் அவரே அந்த படத்தை இயக்கியும் உள்ளார்.இந்நிலையில்  இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. 

இதில் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் போன்ற பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் பார்த்திபனின் ஒத்த சிறப்பு திரைப்படத்திற்கு வாழ்த்துக் கூறி பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகரை மீதி நான் நேசிக்கும் சமூகப் பொறுப்புணர்வு உள்ள கலைஞன் வாழ்த்தும் என்ற பதிவுகளுடன் வெளியிட்டுள்ளார்.