மேடையில் மைக்கை வீசி எறிந்த பார்த்திபன்! செம ஷாக்கான ஏ.ஆர் ரஹ்மான்! நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ.!

மேடையில் மைக்கை வீசி எறிந்த பார்த்திபன்! செம ஷாக்கான ஏ.ஆர் ரஹ்மான்! நடந்தது என்ன? வைரலாகும் வீடியோ.!


parthiban-angrily-throw-the-mike-in-stage

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக, பிரபல இயக்குனராக வலம் வரும் பார்த்திபன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் இரவின் நிழல். இப்படம் ஒரே ஷாட்டில் 96 நிமிடங்கள் படமாக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். 
 
இரவின் நிழல் படத்தில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், பிரிகடா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்காக ஏ.ஆர் ரகுமான் உட்பட மூன்று ஆஸ்கர் வெற்றியாளர்கள் பணியாற்றியுள்ளனர். இந்நிலையில் இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றுள்ளது. அந்த விழாவில் பார்த்திபன், ஏ.ஆர் ரகுமான் உடன் இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, பாடலாசிரியர் மதன் கார்க்கி, இயக்குநர் கரு.பழனியப்பன்  மற்றும் நடிகர் விஜய்யின் தாய் பாடகி ஷோபனா சந்திரசேகர், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு படத்திற்கு வாழ்த்து தெரிவித்து பேசியுள்ளனர்.

அப்பொழுது நடிகர் பார்த்திபன் பேசும்போது அவரது மைக் தொழில்நுட்பக் கோளாறால் வேலை செய்யாமல் இருந்துள்ளது. இந்நிலையில ஆத்திரமடைந்த பார்த்திபன் இருக்கையிலிருந்து வேகமாக எழுந்து சென்று கையிலிருந்த மைக்கை வீசியுள்ளார். அதனை சற்றும் எதிர்பார்க்காத ஏ.ஆர்.ரஹ்மான் ஷாக்காகியுள்ளார். பின்னர் வேறு மைக்கை பெற்று பார்த்திபன் பேச தொடங்கிவிட்டார். அப்பொழுது அவர் தான் செஞ்சது அநாகரிகமான செயல் என்றும், இதற்காக வருத்தப்படுகிறேன் என மன்னிப்பு கேட்டுள்ளார். இதனால் அங்கு சிறு சலசலப்பு நேர்ந்துள்ளது.