இறந்துவிட்டதாக பரவிய வதந்தி.! நடிகை பரவை முனியம்மாவின் தற்போதைய நிலையை பார்த்தீர்களா!!

paravai muniyamma latest photo viral


paravai-muniyamma-latest-photo-viral

தமிழ் சினிமாவில் தூள் என்ற திரைப்படத்தின் மூலம் பாடகியாகவும், நடிகையாகவும் அறிமுகமானார் பரவை முனியம்மா.  இவர்  காதல் சடுகுடு, பூ, தேவதையைக் கண்டேன், ஜெய்சூர்யா, ராஜாதி ராஜா, வீரம், மான் கராத்தே என 25 திரைப்படங்களுக்கு மேல் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகையாக நடித்துள்ளார்.

மேலும் அவர் கலைஞர் தொலைக்காட்சியில் கிராமத்துச் சமையல்  என்ற நிகழ்ச்சியையும்  தொகுத்து வழங்கி வந்தார். அதுமட்டுமின்றி பாட்டி பரவை முனியம்மா உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு நாட்டுப்புற பாடல்களை பாடி வந்தார். 

abisaravaananஇந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனுடன் வாழ்ந்துவந்த அவர்  கடந்த சிலகாலங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தீவிர  சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும் சிவகார்த்திகேயன், அபிசரவணன் போன்ற  சில நடிகர்களும் அவரை சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரவை முனியம்மா இறந்துவிட்டதாகவும் வதந்திகள் பரவி வந்தது.

இந்நிலையில் மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பரவை முனியம்மா அவர்கள் தற்போது சிகிச்சை முடிந்து உடல்நலத்துடன் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவரது புகைப்படங்களை நடிகர் அபிசரவணன் தற்போது வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

abisaravaanan