சினிமா

பிரபல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை கவலைக்கிடம்.. மருத்துவமனையில் அனுமதி..

Summary:

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்துவரும் நடிகை கௌசல்யா செந்தாமரை உடல்நிலை மோசமானநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்துவரும் நடிகை கௌசல்யா செந்தாமரை உடல்நிலை மோசமானநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இந்த தொடரில் மீனா கதாபாத்திரத்தின் பாட்டியாக, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சில நாட்களுக்கு முன் அறிமுகமானார் பிரபல நடிகை கௌசல்யா செந்தாமரை.

இவர் புரட்சி தலைவர் எம்ஜிஆருடன் திருடாதே படத்தில் நடித்திருக்கிறார் அதேபோல வயசு பசங்க போன்ற ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் மறைந்த பழம்பெரும் நடிகர் செந்தாமரை அவர்களின் மனைவியும் ஆவார். தற்போது 74 வயதாகும் இவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை நடைபெற்றுவரும்நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement