சினிமா

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது? புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்!

Summary:

Pandiyan stores mullai modern look photos

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர்களில் ஓன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டு குடும்பத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை மையப்படுத்தி நகரும் இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த தொடரில் முல்லை என்ற கதாபாத்திரம் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை சித்ரா.

சீரியலில் நடிப்பதற்கு முன்பு இவர் பல்வேறு தொலைக்காட்சிகளிலும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார் சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையின் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஓன்று. தொடரில் கதிருடன் இவர் போடும் சண்டை, நகைச்சுவை மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும்.

இந்நிலையில் சீரியல் மூலம் பிரபலமான இவர் சமீபத்தில் அட்டை படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சித்ரா. அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.


Advertisement