சினிமா

விஜய் டீவியில் இருந்து வெளியேறும் முக்கிய பிரபலம்? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Summary:

Pandiyan stores actress sujitha leaving from serial

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில் ஓன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கள்ளக்காதல், கவர்ச்சி, ஆபாசம் என ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் மத்தியில் முழுக்க முழுக்க குடும்ப பாங்கான கதை அம்சம் கொண்ட இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்களின் பேவர்ட் தொடர்களில் ஓன்று.

இந்த தொடரில் மூத்த மறுமகளாக சுஜிதா நடிக்க, இளைய மருமகளாக சித்ரா நடித்துவருகிறார். ஆரம்பத்தில் நெருக்கமாகவே இருந்த இவர்கள் மத்தியில் தற்போது சண்டை வெடித்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் விஜய் டிவி நடத்திய விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகைக்கான விருது சித்ராவுக்கு, சப்போர்டிங் நடிகைக்கான விருது சுஜிதாவுக்கும் வழங்கப்பட்டுள்ளது. தான் தான் ஹீரோயின் என நினைத்திருந்த சுஜிதாவுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சுஜிதா சீரியலை விட்டு வெளியேறினாலும் ஆச்சர்யமில்லை என்று நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது. ஆனால், இது உண்மையா இல்லை வதந்தியா என சுஜிதா பதில் கூறினால் மட்டுமே உண்மை நிலை தெரியவரும்.


Advertisement