சினிமா

அடேங்கப்பா! பிரபல சீரியல் நடிகை பயன்படுத்தும் கை பையின் விலை மட்டும் இத்தனை லட்சமாம்!

Summary:

Pandiyan stores actress mullai using one lakh rupees handbag

ஒருகாலத்தில் பெண்கள் மட்டுமே சீரியல் பார்ப்பார்கள். ஆனால் சிறுவர்கள் தொடங்கி, இளைஞர்கள் வரை சீரியல் பார்க்கும் காலம் வந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் சீரியலில் நடிக்கும் நாயகிகள்தான். நாயகிகளுக்காகவே பல சீரியல்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்போதெல்லாம் சினிமா நடிகையாகலி விட சீரியல் நடிகைகளுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. சுற்றி என்ன நடந்தாலும் சீரியல் பார்ப்பதை ஒரு போதும் நிறுத்தமாட்டேன் என பலரையும் சொல்லவைத்துள்ளது தற்போதுள்ள சீரியல் மோகம்.

கதாநாயகிகளை பொறுத்தவரை மீடியா என்று வந்துவிட்டாலே தாங்கள் உடுத்தும் உடையில் இருந்து அனைத்தும் பிராண்டட் ஆக இருக்கவேன்டும் என்று நினைப்பார்கள். அநதவகையில் பிரபல் தனியார் தொலைக்காட்சியில்  ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் என்ற நாடகத்தில் நடித்துவருபவர் முல்லை என்கின்ற சித்ரா. இவர் சமீபத்திய நேர்காணலில் அவரது கைப்பை ரூபாய் 1 லட்சம் என்று கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல கருத்துக்கள் எழுந்துள்ளது.


Advertisement