பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்தின் மகனா இது! நல்லா வளர்ந்து செம கியூட்டா இருக்காரே! வைரலாகும் புகைப்படம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்தின் மகனா இது! நல்லா வளர்ந்து செம கியூட்டா இருக்காரே! வைரலாகும் புகைப்படம்!



pandian-stores-thanam-son-photo-viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில், ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா, குமரன், காவியா ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர் தொடரில் தனம் என்ற கதாபாத்திரத்தில் தனது கணவரின் தம்பிகளை அம்மாவைப் போல அக்கறையுடனும், அன்புடனும் பார்த்துக்கொள்ளும் அண்ணி கதாபாத்திரத்தில் நடிகை சுஜிதா நடித்து வருகிறார். இவர் 
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஏராளமான சின்னத்திரை சீரியல்களில் நடித்து கலக்கி வருகிறார்.

Thanam

 மேலும் எப்பொழுதும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் சுஜிதா அவ்வப்போது தனது லேட்டஸ்ட் போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் அண்மையில் தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் தீயாய் பரவிய நிலையில், அதனைக் கண்ட ரசிகர்கள் நடிகை சுஜிதாவிற்கு இவ்வளவு பெரிய மகனா என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.