சினிமா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முக்கிய பிரபலத்திற்கு கொரோனா பாதிப்பு! வெளியான தகவலால் செம ஷாக்கில் ரசிகர்கள்!

Summary:

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் வெங்கட் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 20 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்டு அதிலிருந்து மீண்டுள்ளார்.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பெருமளவில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. சாமானியர்கள் முதல் திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என ஏராளமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் மீண்டுள்ளனர். மேலும் பலர் உயிரிழந்த துயரமும் நேர்ந்தது.

இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற குடும்ப கதையை, அண்ணன் தம்பி பாசத்தை மையமாகக் கொண்ட பாண்டியன் ஸ்டோர் தொடரில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான வெங்கட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து கொரோனாவிலிருந்து மீண்ட வெங்கட் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, தான் கொரோனா பாதிக்கப்பட்டு 20 நாட்களுக்கும் மேலாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் அந்த நாட்கள் மிகவும் கடினமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் 2020 ஆம் ஆண்டில் தான் நிறைய கற்றுக் கொண்டதாகவும் அதற்காக நான் நன்றி சொல்லமாட்டேன் எனவும் பதிவிட்டுள்ளார்.
 


Advertisement