சினிமா

அட.. துளி கூட மேக்கப் இல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா! தீயாய் பரவும் புகைப்படம்!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பைப் பெற்ற தொடர் பாண்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்பைப் பெற்ற தொடர் பாண்டியன் ஸ்டோர். குடும்பக் கதையை, அண்ணன் தம்பி பாசத்தை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் ஸ்டாலின், சுஜிதா, குமரன், காவியா, ஹேமா, வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர் தொடரில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகை ஹேமா. இவரது கதாபாத்திரம் ஆரம்பத்தில் வில்லி போல காண்பிக்கப்பட்டு, பின்னர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி அனைவருக்கும் பிடித்த சற்று காமெடி கலந்த கதாபாத்திரமாக மாறியுள்ளது.

நடிகை ஹேமா பாண்டியன் ஸ்டோர் தொடரில் நடிப்பது மட்டுமின்றி யூடியூப் சேனலிலும் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு பிஸியாக உள்ளார். இந்த நிலையில் ஹேமா தற்போது துளிக்கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் மேக்கப் இல்லாமலும் நீங்கள் செம அழகுதான் என கூறிவருகின்றனர்.
 


Advertisement