சினிமா

பாண்டியன் ஸ்டோர் மீனாவிற்கு நிஜத்திலும் குழந்தை பிறந்தாச்சு! என்ன குழந்தை தெரியுமா? உற்சாகமாக தெரிவித்த முல்லை!

Summary:

Pandian store actress hema blessed with boy baby

பாண்டியன் ஸ்டோர் தொடரில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஹேமா ராஜ்குமார். எம்சிஏ படித்த அவர் ஆரம்பத்தில் சைதாப்பேட்டை காவல்துறை அலுவலகத்தில் ஹார்டுவேர் இன்ஜினியராக பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து அவர் பல  தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்து வந்தார். 

பின்னர் சின்னத்திரைக்கு தாவிய அவர் மெல்லதிறந்தது கதவு,  குலதெய்வம், சின்னதம்பி உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் சினிமாவில் பாயும் புலி, இவன் யார் என்று தெரிகிறதா? உள்ளிட்ட  படங்களிலும் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்தே அவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வருகிறார்.

அவர் தற்போது சீரியலில் மட்டுமின்றி நிஜத்திலும் கர்ப்பமாக உள்ளார். மேலும் நிஜத்தில் மட்டுமில்லாமல் சீரியலிலும் இவரது வளைகாப்பு சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீனாவிற்கு சீரியல் கதைப்படி பெண்குழந்தை பிறந்தது. அதனை தொடர்ந்து ஹேமாவிற்கு உண்மையாக எப்பொழுது குழந்தை பிறக்கும் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மற்றொரு கதாநாயகியான சித்ரா மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பகிர்ந்துள்ளார்.


Advertisement