சினிமா

வீட்டை விட்டு வெளியே போங்க.! கோபியிடம் கொதித்தெழுந்த ராதிகா! சூடுபறக்கும் பாக்கியலட்சுமி ப்ரோமோ!!

Summary:

வீட்டை விட்டு வெளியே போங்க.! கோபியிடம் கொதித்தெழுந்த ராதிகா! சூடுபறக்கும் பாக்கியலட்சுமி ப்ரோமோ!!

விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் ஒளிபரப்பாகி ரசிகர்கள் விரும்பி பார்க்கக்கூடிய சீரியலில் ஒன்றாக ஓடி கொண்டிருப்பது பாக்கியலட்சுமி தொடர். ஒரு இல்லத்தரசியின் கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகிவரும் இத்தொடருக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

பாக்கியலட்சுமி தொடரில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலி ராதிகாவுடன் தொடர்பு வைத்திருக்கும் கோபி கதாபாத்திரத்தில் சதீஷ் என்பவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த எபிசோட்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி மூலமாக ராதிகாவிற்கு கோபி மீது சந்தேகம் ஏற்படுகிறது. அதனை தொடர்ந்து என்ன நடக்கபோகிறது? என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் தற்போது புதிய ப்ரொமோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் கோபியின் குடும்பத்தை பார்க்க ராதிகா கேட்கின்றார். ஆனால் கோபி அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். இந்நிலையில் கோபமடைந்த ராதிகா கோபியை வீட்டைவிட்டு வெளியேற சொல்கிறார். இந்த பரபரப்பான ப்ரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.


Advertisement