மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகும் பையா திரைப்படம்; ரசிகர்கள் கொண்டாட்டம்.!

மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகும் பையா திரைப்படம்; ரசிகர்கள் கொண்டாட்டம்.!Paiya Movie Re Release on April 11th 


கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் 02ம் தேதி, கார்த்திக், தமன்னா, சோனியா தீப்தி, ஜெகன், ராமச்சந்தர் துரைராஜ், உமர் லலீப் உட்பட பலர் நடிக்க வெளியான திரைப்படம் பையா (Paiya).

லிங்குசாமி இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிய காதல் படம், ரசிகர்கள் வெற்றிமழையில் நனைந்த படமாக இருந்தது. கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இப்படம் இன்று திரையரங்கில் வெளியானது. 

Karthi

இந்நிலையில், 14 ஆண்டுகள் கழித்து பையா திரைப்படம் மீண்டும் வெளியீடு செய்யப்படும் என படத்தயாரிப்பு குழு அறிவித்து இருக்கிறது. 

இந்த அறிவிப்பு ரசிகர்களை மகிழ்வித்து இருக்கிறது. பலரும் படத்தை மீண்டும் திரையரங்கில் பார்க்க ஆவலுடன் இருக்கின்றனர்..