சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து சர்ச்சையான கேள்வி எழுப்பிய நடிகை ஓவியா.! வைரலாகும் ட்விட்டர் பதிவு..

Summary:

Oviya told about big boss show in his twitter account

தமிழ் சினிமாவில் நடிகர் விமலுடன் இணைந்து களவாணி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஓவியா. அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அவரை புகழின் உச்சத்திற்கு அழைத்து சென்றது பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

இந்தியில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழிலும் ஒளிப்பரப்பி பிரபலமாக்க வேண்டும் என்னும் நோக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழில் அறிமுகம் செய்தது. இந்தியில் பிரபலமானதை போலவே தமிழிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அதிகபட்ச வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 1யில் ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்றவர் என்றால் அது ஓவியா மட்டுமே. ஓவியாவிற்காக ரசிகர்கள் ஆர்மி வைக்கும் அளவுக்கு பிரபலமானார். இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பிக்பாஸ் குறித்த சர்ச்சையான கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்தால் அதை ஏற்பீர்களா?அல்லது எதிர்பீர்களா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பலரும் கருத்து தெரிவித்திருந்த நிலையில் ஒருவர் தடை செய்ய வேண்டும் என்று கருத்து பதிவிட்டிருந்தார்.


அதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை ஓவியா, போட்டியாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் வரை டிஆர்பிக்காக அவர்களைச் சித்ரவதை செய்யாமல் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். 


Advertisement