சினிமா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் ஓவியா...! ரசிகர்கள் கொண்டாட்டம்...!

Summary:

oviya-may-come-to-biggboss

பிரபல தொலைக்காட்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் இரண்டாம் பாகம் இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இறுதியில் நான்கு போட்டியாளர்கள் மட்டும் இருக்கிறார்கள். இதில் ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, ஜனனி, ரித்விகா ஆகியோர் இறுதி போட்டிக்குள் நுழைந்துவிட்டனர். இந்த நான்கு பேரில் யார் வெற்றியாளர் என்று விரைவில் நமக்கு தெரிந்துவிடும். 

பிக்பாஸ் முதல் பாகத்தில் மிகவும் பிரபலமான நடிகை ஓவியா. அந்த போட்டியின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்து அவருக்கென தனியாக ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். மேலும் நடிகை ஓவியாவுக்கு இணையதளத்தில் ஓவியா ஆர்மி என்ற பெயரில் ரசிகர்கள் உருவாகினார்கள். 

இந்நிலையில் ஓவியா தற்போது அவரது  டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அதில் ஒரு ரசிகர் நீங்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவீர்களா உங்களை பார்க்க நாங்கள் ஆர்வமாக காத்துகொண்டு இருக்கிறோம் என கேட்டதற்கு பொருத்திருந்து பாருங்கள் என ஓவியா கூறினார். இப்படி கூறொயதும் ஓவியா மீண்டும் பிக்பாஸ்க்கு வருவது உறுதி எனவும் கூறலாம். 


Advertisement