சினிமா

இது ஓவியாதானா? வித்தியாசமான லுக்கில் ரசிகர்களை சுண்டியிழுத்த ஓவியா.! வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்!!

Summary:

Oviya latest photos viral

களவாணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகனவர் நடிகை ஓவியா. முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றநிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார் ஓவியா. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அதன்பிறகு அதிக வாய்ப்பு இல்லாமல் இருந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆரம்ப முதல் இவரது பேச்சு, நடவடிக்கை , டான்ஸ் போன்றவற்றால் ரசிகர்கள் குவிந்தனர். ஒருகட்டத்தில் ஓவியா ஆர்மி அமைத்து ஓவியாவை கொண்டாடினார்கள் ரசிகர்கள்.

மேலும் இவர் பிக்பாஸ் முதல் சீசனில் நடிகர் ஆரவ்வை காதலிப்பதாக கூறினார். ஆனால் அவர் ஏத்துக்கொள்ளாததால் அந்த நிகழ்ச்சியை விட்டே வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தாலும், தொடர்ச்சியாக விளம்பரங்கள், வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் என ஓவியா பிஸியாக உள்ளார். இந்நிலையில் அவர் சமீபத்தில் நடைபெற்ற SIIMA விருது விழாவில் புடவை அணிந்து கலந்து கொண்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 


Advertisement