ப்பா.. ஓவியாவா இது! கொள்ளை அழகில் கொல்றீயேமா! வச்ச கண் எடுக்காம ரசிக்கும் நெட்டிசன்கள்!!

ப்பா.. ஓவியாவா இது! கொள்ளை அழகில் கொல்றீயேமா! வச்ச கண் எடுக்காம ரசிக்கும் நெட்டிசன்கள்!!



Oviya latest photo viral

தமிழ் சினிமாவில் விமல் நடிப்பில் வெளிவந்து மக்களால் பெருமளவில் ரசிக்கப்பட்ட களவாணி படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா. அதனைத் தொடர்ந்து அவர் தமிழில்  சில படங்களிலேயே நடித்துள்ளார். பின்னர் ஓவியா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது கியூட்டான செயலால், விளையாட்டுத்தனமான பேச்சால் மக்களிடையே பெருமளவில் பிரபலமானார். மேலும் அவருக்கென மாபெரும் ஆர்மியும் உருவானது.

ஓவியா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் ஏராளமான படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் காஞ்சனா 3, 90 ml என ஒரு சில படங்களிலேயே நடித்துள்ளார்.  கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்யாமல் நடித்து அவர் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார். 

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஓவியா அவ்வப்போது தனது கிளாமரான போட்டோ ஷூட் புகைப்படங்கள, சுற்றுலா செல்லும் புகைப்படங்கள் போன்றவற்றை வெளியிடுவார். ஆனால் தற்போது அவர் வெள்ளை நிற சுடிதாரில் ஹோம்லி லுக்கில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதைக் கண்ட ரசிகர்கள் ஓவியாவா இது? கொள்ளை அழகில் ஜொலிக்கிறீயேமா என கூறி வருகின்றனர்.