ஜெய் பீம் படத்தில் நான் செய்த பெரிய தப்பு இதுதான்.! வருத்தத்துடன் நடிகர் சூர்யா பகிர்ந்த உண்மை!!
நல்லா இருந்த பெயரை நாசமாக்கிக்கொண்ட ஓவியா! குவியும் எதிர்ப்புகள்!
களவாணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகனவர் நடிகை ஓவியா. முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றநிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார் ஓவியா. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
அதன்பிறகு அதிக வாய்ப்பு இல்லாமல் இருந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆரம்ப முதல் இவரது பேச்சு, நடவடிக்கை , டான்ஸ் போன்றவற்றால் ரசிகர்கள் குவிந்தனர். ஒருகட்டத்தில் ஓவியா ஆர்மி அமைத்து ஓவியாவை கொண்டாடினார்கள் ரசிகர்கள்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஓவியா அடுத்தடுத்த படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் 90 ml என்ற புது படத்தில் நடித்துள்ளார் ஓவியா. 09 ml திரைப்படம் பெண்கள் சம்மந்தமான படமாக அமையும் என கூறப்பட்டது. பெண்கள் சம்மந்தமான படம் என்பதால் பெண்களின் போராட்டம், கஷ்டம் இவற்றை பற்றிய படமாக இருக்கும் என நினைத்தால் பயங்கர ஆபாசமாக, இரட்டை அர்த்த வசனங்கள், தண்ணி அடிப்பது, தம் அடிப்பது என பயங்கர மோசமாக உள்ளது அந்த படத்தின் ட்ரைலர்.
இந்நிலையில் ஓவியாவுக்கு ஆதரவாக பேசிவந்த தமிழக ரசிகர்கள் அனைவரும் ஒரேநாளில் ஓவியாவுக்கு எதிராக மாறியுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பெயரை ஒரே நாளில் நாசமாக்கிக்கொண்டார் ஓவியா.