சினிமா

ஒரு வாரத்திற்குள் இதனை கோடி வசூல் படைத்த நேர் கொண்ட பார்வை - மகழ்ச்சியில் படக்குழு!

Summary:

one week income detail in ner konda parvai flim

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படத்தை இயக்குனர் வினோத் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி  கொடுத்துள்ளார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8 உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் சாதனையும் குவிகிறது.

ஒரு பெண் No சொன்னால் அதன் அர்த்தம் No தான் வசனம் வைரலாகி வருகிறது.மேலும் இந்த படம் ஞாயிறு கிழமை  மட்டும் தமிழகத்தில் 10 கோடி ரூபாயை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.இது வரை இப்படம் தமிழகத்தில் 40 கோடியை வசூலித்துள்ளது. 


Advertisement