காருக்குள் நடிகையுடன் ஜாலியாக இருந்த நடிகர்.. நேரில் பார்த்த மனைவி நடுரோட்டிலேயே பகீர் சம்பவம்..!

காருக்குள் நடிகையுடன் ஜாலியாக இருந்த நடிகர்.. நேரில் பார்த்த மனைவி நடுரோட்டிலேயே பகீர் சம்பவம்..!


odisha heroin prakruthi attacked by actor wife

காருக்குள் தனது கணவனுடன் இருந்த நடிகை பிரக்ருதி மிஸ்ராவின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கியதால் நடிகரின் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வர் நகரில் ஒடியா நடிகர் பாபுசன் மொகந்தியுடன் நடிகர் பிரக்ருதி மிஸ்ரா காரில் சென்றுள்ளார். இருவரும் காரில் சென்ற நிலையில் ஒரு இடத்தில் காரை நிறுத்தியிருந்தனர். அப்போது அங்கு வந்த பாபுசன் மொகந்தியின் மனைவி த்ருபதி இருவரையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

மேலும், நடுரோட்டில் நடிகை பிரக்ருதி மிஸ்ராவை வெளியே இழுத்து போட்டு தாக்கியுள்ளார். இதில் அவரது பிடியில் இருந்து பிரக்ருதி தப்பிக்க முயன்ற போது, அவரது தலைமுடியை த்ருபதி இழுத்துளார். இருப்பினும் அவரது பிடியிலிருந்து நடிகை தப்பித்து அருகில் இருந்த ஆட்டோ ரிக்ஷாவில் ஏறி செல்ல முயன்றார். 

அப்போதும் விடாமல் துரத்திய த்ருபதி அவரை அங்கிருந்து விரட்டி அடித்துள்ளார். அப்போது த்ருபதி கூறுகையில், "எனது குடும்பத்தை நடிகை பிரக்ருதி மிஸ்ரா அழித்துவிட்டார்" என்றார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், நடிகை ப்ரக்ருதி மிஸ்ராவின் தாயார் த்ருபதி மீது புவனேஸ்வர் நகரின் காரவேலா நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக த்ருபதி மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக டிசிபி பிரதீப் சிங் கூறியிருக்கிறார்.