nota-movie-news
பல எதிர்பார்ப்புக்கு இடையில் எதிர்ப்பு எழுந்துள்ளது...! நோட்டா படம் திரைக்கு வருமா?
தெலுங்கு சினிமாவில் மாபெரும் வெற்றி பெட்ரா திரைப்படம் "அர்ஜுன் ரெட்டி" திரைப்படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டா. இவர் தற்போது முதல் முறையாக தமிழில் நாயகனாக அறிமுகம் ஆகிறார். தமிழில் அவர் நடித்திருக்கும் படம் பெயர் "நோட்டா" . இந்த படத்திற்கு வரவேற்பும் எதிர்பார்ப்பும் அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது எதிர்ப்புகளும் எழுந்துள்ளது. இந்த படத்தை திரையிட கூடாது என்ற புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வகையில் முன்னாள் தணிக்கை குழுவை சேர்ந்த ஜெகதீஷ் ரெட்டி என்பவர் நோட்டா படத்தை தெலுங்கில் வெளியிட கூடாது என்று புகார் அளித்தார். இதற்கான காரணங்கள் என்னவென்றால் அது மிகவும் காமெடியாக தான் இருக்கும்.
அந்த காரணம் என்னவென்று பார்த்ததில் "தெலுங்கானாவில் விரைவில் தேர்தல் வர இருக்கிறது என்றும் இந்த படத்தை மக்கள் அனைவரும் பார்த்தால் அனைவரும் நோட்டாவிற்கு தான் அதிகம் ஒட்டு போடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படம் தவறான முன் உதாரணமாக ஆகிவிடும் என்றும் கூறியுள்ளார்...
Advertisement
Advertisement