பிரபல நடிகை மீது கோபமான அஜித் ரசிகர்கள்- அப்படி என்னதான் நடந்தது?

பிரபல நடிகை மீது கோபமான அஜித் ரசிகர்கள்- அப்படி என்னதான் நடந்தது?


Noorin jerif

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்களுக்கு தனித்தனியே ரசிகர்கள் பட்டாளம் நிறைய இருக்கிறது. 

அஜித் மற்றும் விஜய் ரசிகர்களின் சமூக வலைதள சண்டை நாளுக்கு நாள் மிக தீவிரமாகி வருகிறது. தினம்தோறும் ஒருவரை ஒருவர் மோசமாக குறிப்பிட்டு தேசிய அளவில் ஹேஷ் டேக் செய்து வருகின்றனர். இதற்கு எப்போது முடிவு கிடைக்கும் என்றுதான் பலரது கேள்வியும்.


இந்நிலையில் விஜய் பிறந்த நாளன்று விஜய் ரசிகர்கள் ஒரு ஹேஷ் டேக்கை உருவாக்கி அஜித் ரசிகர்களை பழிதீர்க்கும் விதமாக #வண்டுமுருகன்அஜித் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியுள்ளனர் விஜய் ரசிகர்கள். 

அதில், அஜித்தின் வழக்கறிஞர் கதாபாத்திரத்தை, வடிவேலுவின் வண்டுமுருகன் கதாபாத்திரத்தோடு ஒப்பிட்டு மீம்ஸ்களை உருவாக்கியுள்ளனர்.

இதையடுத்து அஜித் ரசிகர்கள் வடிவேலுவின் கைப்புள்ள கதாபாத்திரத்தை ஒப்பிட்டு ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

வண்டு முருகன் அஜித் என ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டிருந்த ட்விட்டை பார்த்த ஒரு அடர் லவ் பட புகழ் நடிகை நூரின் ஷெரிப் 'அவர் நலம்பெற பிரார்த்தனை செய்கிறேன்' என கூறியுள்ளார்.

இதை பார்த்து கோபமான அஜித் ரசிகர்கள் அவரை ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர்