அறந்தாங்கி நிஷா வீட்டில் நடைப்பெற்ற விசேஷம்! வைரலாகும் வீடியோ.

அறந்தாங்கி நிஷா வீட்டில் நடைப்பெற்ற விசேஷம்! வைரலாகும் வீடியோ.


Nisha

விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்கள் ஏராளம். நடிகர் சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர் போன்ற பல்வேறு பிரபலங்கள் விஜய் தொலைக்காட்சி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்கள். அதேபோல அசத்தலாக காமெடி செய்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்து வருபவர் அறந்தாங்கி நிஷா. இவர் பல ஊர்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டு வருகிறார். 

கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் அறந்தாங்கி நிஷா. மேடையில் இவர் செய்யும் காமெடி, வசனங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதனை தொடர்ந்து இவர் தற்போது சினிமா படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். 

nisha

இந்நிலையில் சமீபத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சஃபா ரியாஸ் என பெயர் சூட்டினர். நிஷா தனது குழந்தையை தூக்கி கொண்டு விஜய் டிவியில் மீண்டும் தனது பணியை தொடங்கியுள்ளார். 

இந்நிலையில் தற்போது நிஷா வீட்டில் குழந்தைக்கு தாய்மாமன் கையால் தேன் கொடுக்கும் விசேஷம் நடைப்பெற்றுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.