நடிகர் விவேக் மறைவு இயற்கைக்கு ஏற்பட்ட இழப்பு.! உருக்கத்துடன் மாவட்ட ஆட்சியர்.!

நடிகர் விவேக் மறைவு இயற்கைக்கு ஏற்பட்ட இழப்பு.! உருக்கத்துடன் மாவட்ட ஆட்சியர்.!


nilgiri collector talk about vivek

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் விவேக்கின் மறைவிற்கு  நடிகர், நடிகைகள், திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சமூக அக்கறை கொண்ட நடிகர் விவேக், சுற்று சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு போன்ற சமூக சேவை பணிகளில் ஈடுபட்ட விவேக், அப்துல்கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் கிரீன் கலாம் அமைப்பு மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை இலக்காக வைத்து செயல்பட்டு வந்தார். 

நீலகிரி மாவட்டத்தில் பசுமையை பாதுகாக்க நடிகர் விவேக் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நான்கு கட்டமாக நீலகிரியில் முகாமிட்டு 4 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியை மேற்கொண்டார். அவரது இழப்பு இயற்கைக்கு ஏற்பட்ட இழப்பு என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.