திருமண சடங்கில் விஜய் சேதுபதி படநடிகை கட்டியுள்ள புடவையை பார்த்தீர்களா! அதுக்கு பின்னாடி இப்படியொரு சீக்ரெட்டா??

திருமண சடங்கில் விஜய் சேதுபதி படநடிகை கட்டியுள்ள புடவையை பார்த்தீர்களா! அதுக்கு பின்னாடி இப்படியொரு சீக்ரெட்டா??


niharika-weart-her-mother-saree-after-32-years

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் தம்பி நடிகர் நாகபாபு. இவரது மகள் நிஹாரிகா. இவர் தமிழில் விஜய் சேதுபதி மற்றும்  கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவான ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இவர்  சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கு  டிசம்பர் 9ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள உதய்விலாஸ் ஹோட்டலில் தொழிலதிபர் சைதன்யா வி.ஜே என்பவருடன் திருமணம் நடைபெறவுள்ளது. இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்நிலையில் திருமணத்திற்கு இன்னும் இரு நாட்களே இருக்கும் நிலையில் திருமணத்திற்கு முன்பு நடக்கக்கூடிய சடங்கு, சம்பிரதாயங்கள் அனைத்தும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

Niharika

இந்நிலையில் நேற்று திருமண நலங்கு வைபவம் நடைபெற்றுள்ளது. அப்பொழுது அவர்  32 வருடங்களுக்கு முன்பு அவரது அம்மா திருமண நிச்சயதார்த்தத்திற்கு அணிந்த பட்டுப் புடவையை அணிந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது அம்மாவின் நிச்சயதார்த்த புகைப்படத்தையும், அவரது புடவையைத் தான் அணிந்திருந்த புகைப்படத்தையும் ஒன்றாக இணைத்து அதனை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.