ரஜினியின் மருமகன் தான் அடுத்த சூப்பர் ஸ்டாரா? கிளம்பும் அடுத்த சர்ச்சை!

Next super star


Next super star


அடுத்த சூப்பர் ஸ்டார் யார் எனும் போட்டி இருந்துவந்த நிலையில் நடிகர்  தனுஷ் ரசிகர் மன்றம் வெளியிட்ட அறிக்கையில், நடிகர் தனுஷை இளைய சூப்பர் ஸ்டார் என குறிப்பிட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. 

சூப்பர் ஸ்டாரு யாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும் என்ற அளவிற்கு சூப்பர் ஸ்டார் என்றால் அது நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே என்ற அளவிற்கு மக்கள் மனதில் அடையாளமாய் இருந்தார் ரஜினிகாந்த். இந்தநிலையில்  ரஜினிக்கு பிறகு அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற போட்டி பெரும் கேள்வியாக இருந்துவந்தது.

Dhanush

ஒரு சிலர் அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் தான் என கூறிவந்த நிலையில், சூப்பர் ஸ்டாராக வரும் தகுதி சிவகார்த்திகேயனுக்கு உள்ளதாக சிலர் கூறிவந்தனர். ஆனால் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், தனுஷ் ரசிகர் மன்றம் வெளியிட்ட அறிக்கையில் இளைய சூப்பர் ஸ்டார் தனுஷ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது தனுஷ் நடிக்கும் அசுரன் திரைப்படம் வரும் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்பட வெளியீட்டின் போது, ரசிகர்கள் கட் அவுட் மற்றும் பேனர் வைக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தி வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் இளைய சூப்பர் ஸ்டார் தனுஷ் சார் அவர்களின் நடிப்பில் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகும் அசுரன் படத்திற்கு
ரசிகர்கள் கட் அவுட் மற்றும் பேனர் வைக்க வேண்டாம். அதற்கு பதிலாக உங்களால் முடிந்த நலத்திட்ட உதவிகளை செய்து கொண்டாடுமாறு அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.