சினிமா

சிங்கபூரை போல மாறும் சிங்கார சென்னை.. நடிகர் விக்ரம் பேட்டி...!

Summary:

next-singapore-is-singara-chennai

தமிழ் சினிமாவில் மிகவும் வித்தியாசமான நடிப்பில் அனைவரும் கவர்ந்தவர் தான் நடிகர் சியான் விக்ரம். இவர் நடிக்கும் அணைத்து படமும் முற்றும் வித்தியாசமாக தான் இருக்கும். இவர் நடிப்பில் முன்னதாக வெளிவந்த படம் தான் சாமி. இது அவருக்கும் மாபெரும் வெற்றி படமாக அமைந்த படம். 
இந்நிலையில் தற்போது அவர் நடிப்பில் "சாமி ஸ்கொயர்" திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 21ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகா இருக்கின்றது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீதை சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். 

இதற்கிடையில் நடிகர் விகாரம் நடித்துள்ள  "தேர்ட் ஐ" ( மூன்றாம் கண்)  என்ற விழிப்புணர்வுக் குறும்படம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் முழுவதும் சிசிடிவி கேமரா பற்றிய படம். இந்த குறும்படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ளார். வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் சிசிடிவி பொருத்துவதை வலியுறுத்தும் மூன்றாம் கண்  என்கிற விழிப்புணர்வுக் குறும்படம் தற்போது உருவாகியுள்ளது.

இந்நிலையில் நேற்று இந்த குறும்படம் சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. காவல் ஆணையர் ஏ.கே. விசுவநாதன் வெளியிட்டார். 

அவ்வப்போது பேசிய நடிகர் விக்ரம், சென்னையும் இனி சிங்கப்பூரை போல மாறி வரும் என்றும், பெண்கள் பயமின்றி நடமாட அணைத்து இடத்திலும் சிசிடிவி கேமரா அவசியமான ஒன்று என்றும் கூறியுள்ளார். 


Advertisement