தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
சன் டிவியின் இந்த பிரபல ஹிட் சீரியல் பாதியிலேயே நிறுத்தப்படுகிறதா? செம ஷாக்கில் அழுது புலம்பும் ரசிகர்கள்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி 2 சீரியல் நிறுத்தப்படுவதாக பரவும் தகவல்கள் உண்மையில்லை என நடிகை ராதிகா கூறியுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களுக்கும் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை பலரும் ரசிகர்களாக உள்ளனர். மேலும் ஒருநாள் எபிசோடை கூட தவறாமல் ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர். இவ்வாறு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டான தொடர் சித்தி. அதன் இரண்டாவது பாகமான சித்தி 2 கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் செல்லும் இந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.
இந்த சித்தி 2 தொடரில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ராதிகா சரத்குமார், நிழல்கள் ரவியுடன் ஏராளமான பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடிகை ராதிகா படிப்படியாக சீரியலில் இருந்து விலகி அரசியலில் முழு கவனம் செலுத்தப் போவதாக கூறியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சித்தி 2 சீரியல் நிறுத்தப்படுவதாக தகவல்கள் இணையத்தில் தீயாய் பரவி வந்தன.
No it’s not stopping. ❤️❤️ https://t.co/GwmNsUFpHO
— Radikaa Sarathkumar (@realradikaa) February 9, 2021
இந்த நிலையில் ரசிகை ஒருவர் ஏன் மேடம் சித்தி 2 சீரியலை பாதியிலேயே நிறுத்துகிறீர்கள்? தயவு செய்து நிறுத்த வேண்டாம் என அழுவது போன்று பதிவிட்டு அதனை ராதிகா சரத்குமாருக்கு பகிர்ந்திருந்தார். அதனைக் கண்ட நடிகை ராதிகா, இல்லை. சீரியல் நிறுத்தப்படவில்லை என பதில் அளித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்