சினிமா

மாஸ்டர் படத்தை கைப்பற்றியதா இந்த பிரபல ஓடிடி நிறுவனம்! வெளிவந்த தகவலால் செம ஷாக்கில் தளபதி ரசிகர்கள்!

Summary:

மாஸ்டர் திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவிருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தில்  கதாநாயகியாக மாளவிகா மோகன் மற்றும் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளனர். மேலும் அவர்களுடன் ஆன்ட்ரியா, கௌரி கிஷன், சாந்தனு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவுற்ற நிலையிலும், நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக படம் வெளியாகாமல் இருந்து வருகிறது. ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.  இந்நிலையில் சமீபத்தில் தியேட்டர்களை திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியது. மேலும் சில படங்களும் ரிலீசாகி வருகிறது.

ஆனால் கொரோனா அச்சத்தால் கூட்டம் இல்லாததால் தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும் சூர்யா நடிப்பில் உருவான சூரரைப்போற்று திரைப்படமும் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மாஸ்டர் படத்தை ‘நெட்பிளிக்ஸ்’ என்ற ஓ.டி.டி. இணையதள நிறுவனம்  கைப்பற்றி பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிட இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இது உண்மையா? வதந்தியா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.


Advertisement