ஹீரோவில் இருந்து வில்லனுக்கு மாறும் சிம்பு; யாருக்கு வில்லன் தெரியுமா?

ஹீரோவில் இருந்து வில்லனுக்கு மாறும் சிம்பு; யாருக்கு வில்லன் தெரியுமா?


new-tamil-cinima---hero-arya---villan-simpu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சிம்பு. நடிப்பு, பாடல், எழுத்து இயக்கம் என அனைத்து துறைகளிலும் பட்டையைக் கிளப்பியவர். அவருக்கு சொந்த பிரச்சினைகள் பல இருந்த காரணத்தினால் நீண்டகாலமாக திரையில் தோன்றாமல் இருந்தார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு செக்கச் சிவந்த வானம் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 

Arya

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வந்தா ராஜாவாகத்தான் படத்தில் நடித்திருந்தார் சிம்பு. படம் வெளியாவதற்கு முன்னர் சிம்பு பேசிய வீடியோ ஒன்று வைரலாகி சர்ச்சையானது. இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் தோல்வி படமாகவே அமைந்தது. 

இந்நிலையில் கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீ முரளி ஆகியோர் நடித்து வெற்றி பெற்ற படம் மப்டி. இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்புவும் ஆர்யாவும் நடிக்க உள்ளார்கள். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமாரும் நடிக்கிறார். இப்படத்தில் ஆர்யாவுக்கு தான் சிம்பு வில்லனாகிறார். சிம்பு வில்லனாக நடிக்கும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.