சினிமா

TRP-யில் மாஸ் காட்ட சன் டிவி போட்ட மாஸ்டர் பிளான்.! இன்றிலிருந்து சும்மா கிழி..!

Summary:


சன் டிவியின் பெரிய வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று அதில் ஒளிபரப்பாகும்


சன் டிவியின் பெரிய வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று அதில் ஒளிபரப்பாகும் தொடர்கள்தான். தற்போது இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சீரியல்களுக்கு அடிமையாக உள்ளனர். இல்லத்தரசிகள் மட்டுமே சீரியல் பார்த்துவந்த காலம் மாறி, தற்போது சிறுவர்கள், இளைஞர்கள், இல்லத்தரசிகள் என பலரும் சீரியல் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

இதனால் தான் சன் டிவி-யின் சீரியல்கள், வாரம் தோறும் வெளியாகும் TRP பட்டியலில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆனால் சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகள் ரசிகர்களை பெரியளவில் கவரும் படி இல்லை என கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் சன் டிவியில் மூன்று புதிய ரியாலிட்டி ஷோஸ்களை களமிறக்க உள்ளனர். ஆம், ரவுடி பேபி, மாஸ்டர் செஃப் மற்றும் சும்மா கிழி என்ற மூன்று புதிய ரியாலிட்டி ஷோஸ்களை சன் டிவி களமிறக்கவுள்ளது. அதுமட்டுமின்றி தற்போது அந்த நிகழ்ச்சிகளின் ப்ரோமோக்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.


Advertisement