வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
மே 1க்கு சன் டீவியில் என்ன படம் தெரியுமா? ஆவலுடன் காத்திருக்கும் தமிழக மக்கள்!
தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான ஓன்று சன் தொலைக்காட்சி. தமிழ் மட்டும் இல்லாது இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளது சன் நிறுவனம். சன் தொலைக்காட்சியின் இந்த வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் அதில் ஒளிபரப்பாகும் தொடர்கள்தான். குறிப்பாக சன் டீவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இல்லத்தரசிகள் மட்டுமே சீரியல் பார்த்துவந்த காலம் மாறி இன்று இளைஞர்கள், இளம்பெண்கள் என பெரும்பாலானோர் சீரியல் பார்க்க தொடங்கிவிட்டனர். அதற்கு முக்கிய காரணம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பிரமாண்டமான சீரியல் தொடர்கள் தான். சீரியல் மட்டும் இல்லாது புது புது படங்களை ஒளிபரப்புவதிலும் சன் தொலைக்காட்சிக்கு நிகர் சன் தொலைக்காட்சிதான்.
புதிதாக வெளியான படங்களை திரை அரங்கில் மட்டுமே பார்க்க முடியும் என்பதை மாற்றி படம் வெளியான சில மாதங்களிலேயே சன் டீவியில் ஒளிபரப்பி வருகிறது இந்நிறுவனம். சமீபத்தில், தமிழ் புத்தாண்டு அன்று சூப்பர் ஸ்டார் நடித்து மாபெரும் வெற்றிபெற்ற "பேட்ட" படத்தை ஒளிபரப்பி தமிழக மக்களை சன்டிவி முன் உட்காரவைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
இந்த நிலையில் தொழிலாளர் தினமான மே 1 அன்று சன்டிவியில், சமீபத்தில் வெளியான, தல அஜித் நடித்து மக்களிடையே பயங்கரமாக பேசப்பட்ட விஸ்வாசம் படம் ஒளிபரப்பவுள்ளனர். மே 1 தொழிலாளர் தினம் மற்றும் அஜித் பிறந்தநாள் என்பதால் விஸ்வாசம் படம் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் தொழிலாளர்த்தினமான மே 1ஐ ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.