த்ரிஷாவை விட வயது குறைவு... ஆனால் அம்மா கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகை! யார் தெரியுமா?
வைரலாகும் நயன்தாராவின் இதுவும் கடந்து போகும் பாடல்! வைரல் வீடியோ...

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துவரும் நெற்றிக்கண் திரைப்படத்தின் இதுவும் கடந்து போகும் பாடல் தற்போது இணையத்தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.
நடிகை நயன்தாரா நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று ’நெற்றிக்கண்’. இந்த படத்தை விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துவரும் இந்த திரைப்படத்தின் 'இதுவும் கடந்து போகும்’ பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
இந்த பாடலை பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். இப்பாடல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.