முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் தல அஜித் - நேர்கொண்ட பார்வை முதல் ரிவியூ

முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் தல அஜித் - நேர்கொண்ட பார்வை முதல் ரிவியூ


Nerkonda paarvai first review

அஜித், ஸ்ராதா, அபிராமி, ஆண்ட்ரியா, ரங்கராஜ் பாண்டே, வித்யா பாலன் ஆகியோர் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் ப்ரீமியர் ஷோ இன்று சிங்கப்பூரில் வெளியிடப்பட்டது. படம் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. 

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான பாடலான அகலாதேவில் அஜித் மற்றும் வித்யா பாலனின் ரொமாண்டிங் காட்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. 

Ajith Kumar

மேலும் க்ளைமாக்ஸில் பைக் ஸ்டண்ட்டில் தெறிக்கவிட்டுள்ளார் தல அஜித். இந்த காட்சி அஜித் ரசிகர்களை கவர்வதற்காகவே கடைசியில் சேர்க்கப்பட்டுள்ளது போல. மற்றபடி கதையம்சம் முழுவதும் சற்றும் பிசிராமல் ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தை அப்படியே வெளிக்கொண்டு வந்துள்ளார் இயக்குனர் வினோத். 

இரவு பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டு சிக்கலில் மாட்டிக்கொள்ளும் 3 இளம் பெண்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடும் கம்பீரமான வழக்கறிஞராக வலம் வருகிறார் அஜித். நீதிமன்ற காட்சிகளை மிகவும் விறுவிறுப்பாக எடுத்துள்ளார் இயக்குனர். 

Ajith Kumar

மற்றபடி வழக்கமான அஜித் படங்கள் போல இல்லாமல் வெறும் கதையை மட்டுமே மையப்படுத்தி படம் நகர்கிறது. படத்தின் கதையை மாற்றிவிடாமலும் அஜித் ரசிகர்களை ஏமாற்றிவிடாமலும் முயற்சி செய்துள்ளார் இயக்குனர். முற்றிலும் ரீமேக் படம் என்பதால் அஜித் ரசிகர்கள் எதிர்பார்ப்பை குறைத்துகொள்வது சற்று நல்லது.