பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாக நடிக்க போகும் நயன்தாரா!" வெளியான தகவல்!

பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாக நடிக்க போகும் நயன்தாரா!" வெளியான தகவல்!


Naynthara going to act sister role in her husband movie

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராகவும், நடிகையாகவும் உள்ளவர்கள் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த "நானும் ரவுடி தான்" படத்தில் நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

nayanthara

இதையடுத்து கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு உயிர், உலக் என்ற இரட்டைக் குழந்தைகள் வாடகைத்தாய் மூலம் பிறந்துள்ளனர். கடைசியாக "காத்துவாக்குல ரெண்டு காதல்" திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார்.

இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று அதிகாரப்பூர்வத் தகவல் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

nayantharaமேலும் இப்படத்தில் எஸ் ஜே சூர்யா மிஷ்கின் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது, அந்தவகையில் தற்போது பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாக நயன்தாரா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.