அடேங்கப்பா! இப்போ இங்கேயா? நயன்தாரா அவரது காதலனுடன் எங்கு சென்றுள்ளார் பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படம்!

அடேங்கப்பா! இப்போ இங்கேயா? நயன்தாரா அவரது காதலனுடன் எங்கு சென்றுள்ளார் பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படம்!


nayanthara-went-suseenthan-temple-with-vignesh-sivan

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நயன்தாரா. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர்  ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் . 

அவரது நடிப்பில் உருவாகி, தீபாவளியை முன்னிட்டு பிகில் திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து அவர் ரஜினியுடன் இணைந்து தர்பார் படத்தில் நடித்துள்ளார். அப்படம் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது.

nayanthara

மேலும் அதனை தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜியுடன் இணைந்து நயன்தாரா  மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அவர் அங்கு சுற்றியுள்ள சில கோவில்களுக்கு தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் சென்று வருகிறார். இவ்வாறு தற்போதும் அவர் நாகர்கோவிலில் அமைந்துள்ள  சுசீந்தரம் கோவிலுக்கு விக்னேஷ் சிவனுடன் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.