பொன்னியின் செல்வன் பட நடிகையுடன் காதலில் விழுந்த நாக சைதன்யா.? தீயாய் பரவும் புகைப்படம்.!
லேடி சூப்பர் ஸ்டாருக்கு கல்யாணம்.! திருமண ஆடையின் விலை மட்டும் இவ்வளவா? தலைச்சுற்றி போன ரசிகர்கள்!!
லேடி சூப்பர் ஸ்டாருக்கு கல்யாணம்.! திருமண ஆடையின் விலை மட்டும் இவ்வளவா? தலைச்சுற்றி போன ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் ரஜினி,விஜய் அஜித் சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவந்த நிலையில் சமீபகாலமாக முன்னணி நடிகர்களுடன் இணைந்து சாய்ரா நரசிம்மரெட்டி, பிகில், தர்பார், லவ் ஆக்சன் ட்ராமா என தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் புகழின் உச்சத்தில் இருக்கும் நயன்தாரா இயக்குநர் விக்னேஷ்சிவனை காதலித்து வரும் நிலையில் அவர்கள் இருவருக்கும் டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்பு திருமணம் நடைபெறவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தது.
மேலும் திருமணத்தை கேரளாவில் உள்ள சர்ச் அல்லது லண்டனில் நடத்தலாமா என ஆலோசித்து வருவதாகவும், திருமணத்திற்காக 30 லட்சம் மதிப்புள்ள உடைகளை இத்தாலி ஆடை வடிவமைப்பாளர்களிடம் ஆர்டர் செய்ததாகவும் தகவல் பரவி வருகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.