திருப்பதியில் விதிமீறல்.! திருமணமான மறுநாளே சர்ச்சையில் சிக்கிய நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடி!!nayanthara-wear-slippers-at-tirumala-temple

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், இயக்குனர், விக்னேஷ் சிவனும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 3 மகாபலிபுரத்தில் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அதில் திரைப்பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் நேரில் கலந்துகொண்டு புதுமண ஜோடிக்கு வாழ்த்துக் கூறினர்.

இந்த நிலையில் திருமணம் முடிந்த கையோடு மறுநாளே நயன்- விக்கி ஜோடி திருப்பதியில் வெங்கடாஜலபதியை தரிசனம் செய்துள்ளனர். மேலும் திருப்பதியில் நடைபெற்ற கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டனர். மேலும் தரிசனத்திற்கு பின் போட்டோசூட்டும் நடத்தியுள்ளனர். அப்பொழுது நயன்தாரா காலில் செருப்புடன் காலணி அணிந்து நடமாட தடைவிதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்றுள்ளார். 

nayanthara

இந்நிலையில் இதுகுறித்து புகார்கள் எழுந்த நிலையில், அதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தேவஸ்தான நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அப்பொழுது தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி பால்ரெட்டி ஏழுமலையான் கூறுகையில், கோவில் முன்பகுதி,நான்கு மாட வீதிகள், லட்டு கவுண்டர், கோவில் திருக்குளம் போன்ற பகுதிகளில் காலணியுடன் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரியளவில் போட்டோ ஷூட் நடத்த தேவஸ்தானத்திடம் அனுமதி பெற வேண்டும்.

nayanthara

இவ்வாறு இதற்கு முன் யாரும் ஏழுமலையான் கோவில் முன்பு போட்டோஷூட்டெல்லாம் நடத்தியது கிடையாது. மேலும் அந்த நேரத்தில் அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு ஊழியர்களுக்கு தகுந்த அறிவுரை கூறி அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்த தவறி விட்டனர். இந்நிலையில் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.